×

கூட்டணிக்கு ராகுல் நோ சொல்லிட்டாரு...... டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அப்செட்

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறுத்துவிட்டார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிப்பதற்காக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வந்தார். இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்ததால் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கூட்டணிக்கு ராகுல்காந்தி மறுத்துவிட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தேன். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கு அவர் மறுத்துவிட்டார். கூட்டணி தொடர்பாக ராகுலைத்தான் சந்தித்து பேசினோம். ஷீலா தீட்சித்தை சந்திக்கவில்லை” என்றார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பதற்கு டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தது. இந்நிலையில் ராகுல் கூட்டணிக்கு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul No ,Kejriwal Abbott ,coalition ,Delhi , Rahul, Delhi Chief Minister, Kejriwal,
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...